சமூக வலைதளங்களில் கசிந்த தேர்வு வினாத்தாள்…!! பள்ளிக் கல்வித் துறை அதிர்ச்சி…!
Author: kavin kumar13 February 2022, 10:00 pm
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டு தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் நாளை நடைபெற இருந்த 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. இந்த சூழலில் 10 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான அறிவியல் வினாத்தாளும்,
12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாளும் முன்கூட்டியே வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதையடுத்து முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து காவல்துறையிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகார் அளித்துள்ளார்.இதைதொடர்ந்து வினாத்தாள்கள் கசிந்தது குறித்து விசாரணை நடத்த தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் நாளை தேர்வு நடைபெற இருந்த நிலையில், வினாத்தாள் கசிந்ததால் ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.