மொட்டை மாடியில் காதலை வளர்த்த சட்டக் கல்லூரி மாணவர்கள் : திடிரென வந்த காதலியின் தாய் : மாணவனுக்கு நேர்ந்த கதி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2023, 9:34 pm

சேலம் கொல்லப்பட்டியில் சட்டக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தருமபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் பகுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருடைய தாய் தந்தையர் இந்தியன் வங்கியில் மேலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அதே கல்லூரியில் கரூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் ஹரிணி தனது தாய்-தங்கையுடன் கொல்லப்பட்டி பகுதியில் வாடகை வீடு எடுத்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் கரூரில் பள்ளியில் பயின்ற போது மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனால் தங்களுடைய காதலை சட்டக் கல்லூரியிலும் தொடர்ந்துள்ளனர்.

இதனிடைய நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் காதலி தங்கி இருந்த வீட்டுக்குச் சென்ற சஞ்சய் ஹரிணியுடன் மொட்டை மாடியில் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தன்னுடைய மகள் வீட்டில் இல்லாததால் அவரை தேடி மொட்டை மாடிக்கு அவர்கள் தாயார் சுகந்தி வந்தபோது இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார்.

அப்போது அங்கிருந்து தப்பிப்பதற்கு ஏதும் வழி இல்லாததால் செய்வது அறியாத தவித்த சஞ்சய் சுமார் 50 அடி உயரத்தில் இருந்த மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சஞ்சய் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு சஞ்சையின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

சஞ்சய் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாய்க்கு பயந்து காதலன் மொட்டை மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!