தடுமாறிய முதலமைச்சர் ஸ்டாலின்.. கை தாங்கிப் பிடித்த பிரதமர் மோடி : வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2024, 8:44 pm

தடுமாறிய முதலமைச்சர் ஸ்டாலின்.. கை தாங்கிப் பிடித்த பிரதமர் மோடி : வைரலாகும் வீடியோ!

சென்னையில் கேலோ இந்தியா போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டன. முன்னதாக போட்டியை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன.

அங்கிருந்து நேரு உள்விளையாட்டரங்கிற்கு பிரதமர் மோடி வந்தார். உடன் முதலமைச்சரும் வந்தார். விழா மேடைக்கு இருவரும் பேசிக் கொண்டே வந்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் கையை இறுகப்பற்றிய மோடி பேசிக் கொண்டே வந்தார், அப்போது கால் இடறி தடுமாறிய முதலமைச்சரை பிரதமர் மோடி தாங்கிப் பிடித்தார்.

பின்னர் விழா மேடையில் பிரதமர் மோடியும் முதலமைச்சர் ஸ்டாலினும் அருகருகே அமர்ந்தனர். முதலமைச்சர் அருகே மத்திய இணையமைச்சர் எல் முருகனும் அவர் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அமர்ந்திருந்தனர்.

இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் மோடி தாங்கிப் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி