5 கிலோ உருளைக் கிழங்கு வேணும்: கோட் வேர்டால் பறிபோன வேலை: அதிரடியாய் சஸ்பென்ட் செய்த அதிகாரி…!!

Author: Sudha
12 August 2024, 2:22 pm

உத்தரப்பிரதேச மாநிலம் கர்னாஜ் பகுதியைச் சேர்ந்தவர் சப் இன்ஸ்பெக்டர் ராம்கிரிலால் அவரிடம் அதே பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர் தன்னுடைய வழக்கு ஒன்றை முடித்துத் தரும்படி கேட்டு இருக்கிறார்.

இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியானது அந்த ஆடியோவில் ஐந்து கிலோ உருளைக்கிழங்கு வேண்டும் என சப் இன்ஸ்பெக்டர் கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் விவசாயி ஐந்து கிலோ முடியாது இரண்டு கிலோ தருகிறேன் என்கிறார். கடைசியில் மூன்று கிலோ என பேரம் பேசி முடிக்கப்பட்டது.

இந்த ஆடியோ குறித்து போலீசார் துவக்கி விசாரணையில் உருளைக்கிழங்கு என்பது பணத்திற்காக கோட் வேர்ட் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விஷயத்தை அறிந்த கர்னாஜ் எஸ் பி அமித்குமார் ஆனந்த் சப் இன்ஸ்பெக்டர் ராம்கிரிவாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…