விடிய விடிய நடந்த சோதனை: சார்பதிவாளர் அலுவலகத்தில் சிக்கிய 2.8 லட்சம் லஞ்சப் பணம்: கோவையில் பரபரப்பு…!!

Author: Sudha
8 August 2024, 1:54 pm

கோவை பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பெரியநாயக்கன் பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப்படுகின்றன.

இங்கு சார்பதிவாளர்களாக அருணா மற்றும் ரமேஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் சார்பதிவாளர் அருணா தன்னிடம் 2 லட்சத்து 80 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக பெயர் குறிப்பிடாத நபர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர் அதற்குள் சார் பதிவாளர் அருணா தனது காரில் கிளம்பியுள்ளார்.

உடனடியாக அவரை பின்தொடர்ந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அருணாவின் காரை மடக்கி பிடித்தனர் அந்த காரை சோதனை செய்தபோது ரூபாய் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பணம் இருப்பது தெரிய வந்தது உடனடியாக சார்பதிவாளர் அருணாவை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.


அப்போது அலுவலகத்தின் கதவுகளை அடைத்து விட்டு உள்ளே இருந்த பணியாளர்களை வெளியேறக் கூடாது என கூறி ஆவணங்களை சோதனை செய்தனர். மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தின் முன்புற கேட்டுகளும் மூடப்பட்டு வெளி நபர்கள் உள்ளே வருவதும் தடுக்கப்பட்டது.

இரவு 8 மணியளவில் தொடங்கிய சோதனை காலை 7 மணி அளவில் நிறைவுற்றது.இந்த சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார் பதிவாளர் அருணா-வை விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். சுமார் 12 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!