ரோகித்திடம் இருந்து வந்த செய்தி.. திடீரென பாதியில் வெளியேறிய கில் ; நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நடந்த பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
15 November 2023, 4:30 pm

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு இந்தியா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. மும்பையில் இன்று நடந்து வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி, களமிறங்கிய கில் மற்றும் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பவுண்டரிக்கும், சிக்சருக்கமாக பறக்க விட்டனர்.

இதனால், அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் ஷர்மா 29 பந்துகளில் 47 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, கில் மற்றும் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனிடையே, டக்கவுட்டில் அமர்ந்திருந்த கேப்டன் ரோகித் ஷர்மா, 12வது வீரரான அஸ்வினை அழைத்து, பேட்டிங் செய்து கொண்டிருக்கும் கோலி, கில்லுக்கு ஒரு தகவலை சொல்லி அனுப்பினார்.

அஸ்வினும் களத்திற்கு சென்று இருவரிடமும் ஏதோ கூறினார். அதன்பிறகு, கில் மற்றும் கோலியும் மளமளவென ரன்களை குவித்து வந்தனர்.

இதனிடையே, ஆட்டத்தின் 23வது ஓவரில் கில் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். 79 ரன்கள் குவித்திருந்த போது அவர் Retired hurt ஆகி வெளியேறினார். இதனால், அடுத்த பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் ஐயர் களத்திற்கு வந்தார். சிறப்பாக ஆடி வந்த கில் தசைபிடிப்பால் வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 391

    0

    0