நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து புகார்.. சாட்டையை சுழற்றும் அண்ணாமலை? இன்று வெளியாகும் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 19ம் தேதியே வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கட்சி மேலிடம் சார்பில், தேர்தல் பணியில் ஈடுபட்ட, ‘பூத்’ கமிட்டி நிர்வாகிகளுக்கு செலவு தொகை வழங்குவது உள்ளிட்ட ஒட்டு மொத்த தேர்தல் செலவுக்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா, 15 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டது.
பல தொகுதிகளில் முறையாக இந்தப் பணத்தை வழங்காமல், முக்கிய நிர்வாகிகள் பதுக்கி விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, டில்லி பா.ஜ., மேலிடத்திற்கும், தமிழக தலைமைக்கும் தொண்டர்கள் புகார்களை அனுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: ஆசை ஆசையாய் வாங்கிய ஆடை.. பானி பூரி சாப்பிடுவதற்குள் அபேஸ்.. ஷாக் சிசிடிவி!
தமிழகத்தில் தேர்தல் முடிந்த உடனே, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா என, தொடர்ந்து பிற மாநிலங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்கு சென்றார் அண்ணாமலை. அதனால், கட்சியினர் மீது எழுந்த புகார் தொடர்பான விசாரணையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
காலை 9.30 மணிக்கு அமிஞ்சிகரை அய்யாவு மஹாலில் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மாநில நிர்வாகிகள் அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், வேட்பாளர்கள், பாராளுமன்ற தொகுதி வாரியாக மையக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டம் முக்கிய கூட்டம் என்பதால் எல்லோரும் கட்டாயம் கலந்து கொள்ளும்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தொகுதிகளின் நிலவரங்கள், செலவு கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட இருப்பதால் பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது.
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
This website uses cookies.