பாஜக நிர்வாகி திடீர் கைது… அண்ணாமலை போட்ட ட்வீட் : பரபரப்பில் கோவை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2023, 12:56 pm

கோவை பாஜக மாநில தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வக்குமார், சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு பதிவுகளை பதிவிட்ட பாஜக மாநில தொழிற்பிரிவு(BJP TN industrial cell) துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணபதி புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தை தொடர்ந்து காளப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் திரு @Selvakumar_IN அவர்களைக் கைது செய்துள்ள திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திறனற்ற திமுக அரசு. இதற்கெல்லாம் அஞ்சுபவர்களில்லை தமிழக பாஜக தொண்டர்கள் என பதிவிட்டுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி