பாஜக முக்கிய நிர்வாகி வேலூர் இப்ராஹிம் திடீர் கைது : கேவலமான ஆட்சி என கோஷமிட்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2023, 12:19 pm

இன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட திருப்புனவாசல்காவல் சரகத்திற்கு உட்பட்ட அரசங்கரை செக் போஸ்ட் பகுதியில் கோட்டைப்பட்டினம் காவல்துணை கண்காணிப்பாளர் கௌதம் தலைமையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டபோது மதுரையில் இருந்து மணமேல்குடி செல்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி வேலூர் இப்ராஹிம் வந்துள்ளார்.

அப்போது மணமேல்குடி பகுதிக்குசெல்லக்கூடாது என்று அவரை கைது செய்தனர். பின்பு அவரை திருப்புனவாசல் தனியார் கல்யாண மண்டபத்தில் கைது செய்தமாநில நிர்வாகி வேலூர் இப்ராஹீமை வைத்தனர் .

பின்பு அவரை கைது செய்த காவல்துறையினர் புதுக்கோட்டை அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், கேவலமான ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார் திரு ஸ்டாலின், இவ்ளோ பெரிய அராஜகம், ,தை விட தமிழகத்திற்கு ஒரு கேவலம் ஸ்டாலின் ஆட்சியில் வராது, முதலவ்ராக இருப்பதற்கு ராஜினாமா செய்து விட்டு போகலாம், திமுக ஒழிக என கோஷமிட்டு பின்னர் போலீசாரின் வாகனத்தில் ஏறிச்சென்றார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!