திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் ஆளுநர் இல.கணேசன் : இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் அனுமதியால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 8:01 pm

மேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு கவர்னராக இருக்கக்கூடிய இல.கணேசன் இன்று காலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் இதயத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கவர்னர் இல.கணேசன் உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல தற்போது காய்ச்சல் காரணமாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைந்து குணமாக தமிழக அரசியல் தலைவர்களும், கட்சி தொண்டர்களும் வேண்டியுள்ளனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்