முதலமைச்சர் தலைமையில் திடீர் ஆலோசனை.. அறிவாலயத்தில் குவியும் தொண்டர்கள்.. வெளியாகும் அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan18 September 2024, 12:59 pm
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
இந்த ஆலோசனை கூடத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திருச்சி சிவா, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டு வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் துணை முதலமைச்சர், புதிய மாவட்ட செயலாளர்கள், 2026 சட்டசபை தேர்தல் போன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க: 17 வயது கொளுந்தியாவை மிரட்டி அடிக்கடி உல்லாசம்… கர்ப்பமாக்கிய அக்காவின் கணவரை வளைத்தது போலீஸ்!
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய போது அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட வாய்ப்பு என கருதப்படும் நிலையில் கட்சி தொண்டர்கள் பலரும் அறிவாலயத்திற்கு வெளியே குவிந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.