ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்…சீறும் ராட்சத அலைகள்: நங்கூரமிட்ட படகுகள் கரை தட்டியதால் மீனவர்கள் அச்சம்..!!

Author: Rajesh
15 May 2022, 8:28 am

ராமநாதபுரம்: ராமேசுவரத்தில் கடல்நீர் திடீரென உள்வாங்கியதால் சாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிகின்றன. இதனால், மீனவர்கள் மற்றும் மக்கள் சற்று அச்சம் அடைந்துள்ளனர்.

ராமேசுவரத்தில் கடல்நீர் இன்று திடீரென 100 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கி உள்ளது. இதனால், கடலில் உள்ள பவளப்பாறைகள் வெளியே தெரிகின்றன. இதேபோன்று சாமி சிலைகளும் தென்படுகின்றன. ராமேசுவரம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.

அக்னிதீர்த்த கடற்கரையில் கடலுக்கு உள்ளே இருந்த பழைய சாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிகின்றன. கடல்நீர் உள்வாங்கி, கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், காற்றின் வேகமும் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் உள்ளது. கடல் நீர் உள்வாங்கியுள்ள நிலையில், நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கபட்ட படகுகள் தரைதட்டி நிற்கிறது.

படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகம் அதிகரித்தது, கடல் சீற்றம், கடல்நீர் உள்வாங்கியது, கடல் கொந்தளிப்பு ஆகியவற்றை முன்னிட்டு அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு இன்று முன்னெச்சரிக்கையாக மீன்பிடிக்க செல்லவில்லை.

  • raakayi teaser update தனுஷ் வழியில் நயன்தாரா..புதிய படத்தின் அப்டேட் வெளியீடு..!
  • Views: - 1133

    0

    0