ஆளுங்கட்சியை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் திடீர் ஐடி ரெய்டு: சென்னை, வேலூர் உள்பட 28 இடங்களில் அதிரடி சோதனை..!!

Author: Rajesh
2 March 2022, 1:14 pm

ராணிப்பேட்டை: திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏவி சாரதி என்பவர் வீடு உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வசிக்கும் திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி. சாரதி என்பவர் கல்குவாரி நடத்தி வருகின்றார். அவரது வீட்டில் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏ.வி. சாரதி முன்னதாக,அதிமுகவில் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்தார் தற்போது 4 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அவருடைய வீடு, அலுவலகங்கள், கல்குவாரி பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆளுங்கட்சியை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் சோதனை நடைபெறுவதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்வு காரணமாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, சென்னை புரசைவாக்கம் , மேடவாக்கம் , சோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. புரசைவாக்கதத்தில் சுரேஷ் லால்வானி என்ற பைனான்சியர் வீட்டில் 10 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேடவாக்கம் அருகே ஈ.கே குழுமத்திற்கு சொந்தமான வீடு அலுவலகங்களிலும் சோதனை நடைப்பெயற்று வருகிறது. ஸ்ரீபெரம்பத்தூரில் அருகே உள்ள சோமங்கலத்தில் ஜே .கே குவாரியில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி