அதிமுக தலைமை அலுவலக சாலைக்கு திடீர் பெயர் மாற்றம் : வெளியான காரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2023, 8:42 pm

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒரு சாலைக்கு அவ்வை சண்முகம் சாலை என்று பெயர். இந்த சாலையில்தான் அதிமுகவின் தலைமை அலுவலகம் உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இந்த சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமர்ந்துதான் தங்களது கட்சிப் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வை சண்முகம் சாலை என்றால் உடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதிமுக தலைமை அலுவலகம்தான். கட்சியின் பல்வேறு முக்கியமான முடிவுகளையும் தீர்மானங்களையும் கண்டது இந்த சாலையில் அமைந்த அதிமுக கட்சி அலுவலகம்.

இந்நிலையில், ‘அவ்வை சண்முகம் சாலை’யின் பெயரை மாற்றி அதற்கு, ‘வி.பி.ராமன் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்து. சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சரி, ‘யார் இந்த வி.பி.ராமன்’ என்பதில் பலருக்கும் ஐயம் ஏற்படுவது இயல்புதான். வி.பி.ராமன் தி.மு.க.வின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர்.

இவர் 1957ம் ஆண்டு முதல் 60ம் ஆண்டுகளில் திமுகவின் அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு ஆற்றியவர். வழக்கறிஞரான இவர், 1977ம் ஆண்டு முதல் 1979 வரை தமிழ்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில்தான் இவர் வாழ்ந்த பகுதிக்கு அவர் பெயரைச் சூட்ட அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில், அவ்வை சண்முகம் சாலையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலை பகுதியினை வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்றம் செய்வது என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 422

    0

    0