விடிஞ்சா தேர்தல்.. கிளாம்பாக்கத்தில் திமுக அரசுக்கு எதிராக நள்ளிரவில் நடந்த திடீர் போராட்டம்.!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2024, 8:55 am
Kilam
Quick Share

விடிஞ்சா தேர்தல்.. கிளாம்பாக்கத்தில் திமுக அரசுக்கு எதிராக நள்ளிரவில் நடந்த திடீர் போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஏப்ரல் 17, 18-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் உட்பட 10,214 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது.

பயணிகளின் வசதிக்காக நேற்று சென்னையில் இருந்து வழக்கமான 2,092 பேருந்துகளுடன் 1,785 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும், பயணிகள் கூட்டம் பேருந்து நிலையத்தில் அலை மோதியது.

குறிப்பாக கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் நடைமேடைகளில் மக்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது.

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து பஸ்களிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டதால் ஒவ்வொரு பஸ்சில் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு ஏறியதை காண முடிந்தது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஏப்ரல் 17, 18-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் உட்பட 10,214 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது.

பயணிகளின் வசதிக்காக நேற்று சென்னையில் இருந்து வழக்கமான 2,092 பேருந்துகளுடன் 1,785 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட்டது. பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும், பயணிகள் கூட்டம் பேருந்து நிலையத்தில் அலை மோதியது.

மேலும் படிக்க: உங்க கிட்ட நான் கேட்கறது ஒண்ணே ஒண்ணுதான் : வாக்களித்த பின் கோவை அதிமுக வேட்பாளர் வேண்டுகோள்!

சொந்த ஊர்களுக்கு செல்ல குவிந்த பயணிகள் போதிய பேருந்துகள் இல்லை என்று கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் குறைவாகவே வழக்கமாக இயக்கப்படும். தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

எனினும், பெரும்பாலான பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதனால், கிளாம்பாக்கத்திற்கு வந்த பயணிகள் பேருந்துகள் கிடைக்காததால் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் பேருந்துகள் கிடைக்காத ஆத்திரத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் பயணிகள் ஈடுபட்டதால், அங்கு வந்த போலீசார், பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாற்று பேருந்து ஏற்பாடுகளை செய்தனர். எனினும், கிளம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் விடிய விடிய பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Views: - 159

0

0