திடீர் நிறுத்தி வைப்பு : செந்தில் பாலாஜி வழக்கில் டுவிஸ்ட்.. இன்னும் உத்தரவு வராததால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2024, 4:30 pm

தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த வழக்கில் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுக்கிறேன் என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார். மேலும், செந்தில் பாலாஜி மீதான பிரதான வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 252

    0

    0