நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணத்தில் திடீர் திருப்பம்… சிக்கிய 2 கடிதங்கள்..!!!

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணத்தில் திடீர் திருப்பம்… சிக்கிய 2 கடிதங்கள்..!!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ந்தேதி மாயமான நிலையில் நேற்று வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த கே.பி.கே. ஜெயக்குமார் காண்டிராக்ட் தொழிலும் செய்து வந்தார். அவர் கடந்த 2-ந்தேதி மாயமான நிலையில் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவரது கட்சி அலுவலகத்தில் எழுதி இருந்த கடிதம் சிக்கியது.

30-ந்தேதியே காங்கிரஸ் கட்சியின் லெட்டர் பேடில் மரண வாக்குமூலம் என்று அவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் இவர்கள் தான் காரணம் என சிலரது பெயரை குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் நேற்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கை, கால்கள் பலகையில் மின் ஒயரால் கட்டப்பட்டிருந்ததால், அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர் ஆனந்தி, தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.இதற்கிடையே கே.பி.கே. ஜெயக்குமார் தனது மருமகன் மற்றும் மொத்த குடும்பத்தினருக்கு என்று எழுதிய 2 கடிதங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், அவர் தொழில் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பலருக்கு பணம் கொடுத்த விபரங்கள் மற்றும் தான், யார் யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்த விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதோடு குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில், குடும்பத்தினர் யாரும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை பழிவாங்க நினைக்க வேண்டாம். சட்டம் தனது கடமையை செய்யும் என கூறி உள்ளார். தற்போது வரை போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கூறுகையில், ஜெயக்குமார் தனசிங் சாவு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன், வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் தலைமையில் 7 தனிப்படைகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் கை, கால்கள் ஒயரால் கட்டப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமாக யாராவது நடமாடினார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் கொலை செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அவரது சாவிற்கான காரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை விபரத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடர போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் உடலுக்கு இன்று காலை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அவரது உடல் அவரது மகன் கருத்தையா ஜெப்ரினிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூருக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இதனையொட்டி உடல் கொண்டு செல்லப்படும் வழியில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி நாங்குநேரி, திசையன்விளை பஜார், கரைசுத்துபுதூர், உவரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் : சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…

5 minutes ago

திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ

எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

8 minutes ago

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…

44 minutes ago

வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் அடித்த நட்சத்திர ஜோடி.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே!

சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…

52 minutes ago

வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…

யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…

2 hours ago

கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…

3 hours ago

This website uses cookies.