உயிரிழந்த விசாரணைக் கைதி ராஜசேகர் வழக்கில் திடீர் திருப்பம் : பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்… காவல்துறை விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 6:41 pm

விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை என்பதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி என கூடுதல் ஆணையர் அன்பு கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் அப்பு எனப்படும் எஸ்.ராஜசேகர் (வயது 33) என்பவர் திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை கொடுங்கையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ராஜசேகர் பிரபல ரவுடி என்றும், இவர் மீது திருட்டு, கொலை, கொள்ளை தொடர்பாக 25 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் கூறப்பட்டது. ராஜசேகரை விசாரணைக்காக அழைத்து வந்தபோது உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும், அதன்பிறகு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் வழியிலேயே எஸ்.ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாக தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் விக்னேஷ் மரணம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில், தற்போது இந்த விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, உயிரிழந்த ராஜசேகரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை சிபிசிஐடி மற்றும் வழக்கை விசாரித்து வரும் மேஜிஸ்டிரேட் லக்‌ஷ்மி ஆகியோரிடம் சமர்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், ஒரு தொடையில் காயம் இருந்துள்ளது என்றும் லாக்கப் மரணத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, ராஜசேகரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட லாக்கப் மரணம் எனவும் குற்றசாட்டுகள் வர தொடங்கின.

இந்த நிலையில், விசாரணைக்கைதி ராஜசேகர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, விசாரணை கைதி ராஜசேகரின் உடலில் 4 காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளது.

இந்த காயங்கள் எப்பொழுது ஏற்பட்டது என்றும் இந்த காயங்களால் மரணம் ஏற்படவில்லை எனவும் அறிக்கையில் தகவல் உள்ளது. லாக்கப் மரணத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை என்பதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி என்றும் ராஜசேகர் மரணத்திற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், இரவு நேரத்தில் விசாரணைக்காக யாரையும் காவல் நிலையத்தில் வைத்திருக்க கூடாது என்றும் கூறினார்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?