உடல்நிலை பூரண குணமடைந்து ரஜினிகாந்த் வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்வதாக விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்துக் கொண்டு கூலி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே வேட்டையன் பட ரிலீசுக்கு காத்துள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி இன்று காலை முதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்குத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். பின்னர் அவரது உடல்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்களும் வந்தன. இந்த நிலையில் நேற்று மாலை முதலே அப்பல்லோ மருத்துவமனைக்கு விஐபி ஒருவர் வரஉள்ளதாக மருத்துவக்குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அனுமதிகப்பட்டுள்ளதாகவும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செய்யக் கூடிய அதிநவீன அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு எனத் தகவல் வெளியானது. வயிற்றுக்கு அருகே உள்ள ரத்த நாளம் பெரிதாகி உள்ளதால் அதற்கான சிகிச்சை என சொல்லப்படுகிறது. ஐசியூ பிரிவில் 24 மணி நேரம் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: ஹோட்டலில் ஆண் நண்பருடன் உல்லாசம்.. உடலுறவுக்கு பின் உயிரிழந்த இளம்பெண் : ஷாக் சம்பவம்!
இது குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 நாட்களில் ரஜினி வீடு திரும்புவார் என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அதே சமயம், இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக STENT வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய், ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுவதாக X தளத்தில் வெளியிட்டுள்ளார். சக நடிகராக அல்லாமல் கட்சியின் தலைவராக, தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ X தளத்தில் இருந்து பதிவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.