மதுரை: சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து, விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை வந்தடைந்தார். அவரை, மதுரை மாவட்ட அதிமுக சார்பில் ,முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்த விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர், விமான நிலைய பேருந்தில் வந்தபோது, செல்போனில் வீடியோ எடுத்து, துரோகியுடன் பயணம் செய்வதாகவும், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர் என்றும், 10.5 இடஒதுக்கிடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் எனக் கூறி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார், அந்த நபரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். முதல்கட்ட விசாரணையில், சிங்கபூரிலிருந்து சென்னை வழியாக மதுரை வந்த சிங்கம்புணரி எம்.வையாபுரிபட்டி கிராமத்தை சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன் (42) என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் ராஜேஸ்வரன் செல்போனை பறித்து, விசாரணைக்காக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதனால், மதுரை விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியவரை, மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் அழைத்து வந்த போது, அங்கிருந்தவர்கள் அந்த நபரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை அண்மையில் பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் பகிர்ந்துள்ளார்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.