கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம்.. சு.வெங்கடேசன் எம்பி கருத்து!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2024, 6:04 pm

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைதியைச் சீர்லைக்கும் வகையில் பேசியதாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம். தேர்தலில் பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக. கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம்.

அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை.தேசம் அருந்ததிராயின் பக்கம் நின்று ஜனநாயக விரோதிகளை எதிர்கொள்ளும் என பதிவிட்டுள்ளார்.

  • Maharaja movie box office in China பிராமண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 284

    0

    0