நீட் மறுதேர்வு இல்லை; நீட் தேர்வு முடிவை ரத்து செய்ய வேண்டாம்;உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

Author: Sudha
24 July 2024, 9:00 am

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, 40 க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கை நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ஐஐடி மெட்ராஸ் வழங்கிய அறிக்கையை நாங்கள் ஆய்வு செய்து இருக்கிறோம். நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கு போதுமான தரவுகள் இல்லை. நீட் தேர்வில் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் மீறும் நிகழ்வுகள் நடந்துள்ளது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் தற்போது வரை சமர்ப்பிக்கப் படவில்லை.

எனவே நீட் மறுதேர்வு நடத்தப்படாது. நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் தனிப்பட்ட முறையில் அவர்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களை நாடலாம்” இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

நீட் தொடர்பான குளறுபடிகளை சரி செய்ய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இனி இதுபோன்ற சிக்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க செயல்முறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

இந்தத் தீர்ப்பினை குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிடும்போது நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் பலரின் யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.மற்றும் உண்மை வென்றுள்ளது.மாணவர்களின் நலன் காக்கும் தீர்ப்புக்கு நன்றி,தேர்வு முறைகளைப் பற்றி குறை கூறியவர்களின் கண்கள் தீர்ப்பின் மூலம் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!