எம்எல்ஏ க்கள் குறித்த சர்ச்சை பேச்சு: நேரில் ஆஜராக வேண்டும்: சபாநாயகருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு…!!

Author: Sudha
7 August 2024, 1:25 pm

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எம்எல்ஏ க்கள், திமுக வில் இணையத் தயாராக இருப்பதாக சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார்.

இதனையடுத்து பாபு முருகவேல் என்பவர், அப்பாவு மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு எம்.பி மற்றும் எம்எல்ஏ க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சபாநாயகர் அப்பாவு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், செப் 9 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் வழக்கையும் செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

  • Ajith did Cheated the famous actress quits cinema 90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!