ஆடியோ லீக் செய்த சூர்யா.. அண்ணாமலை ஒரு சில்லரை என ரிப்ளை செய்த சாட்டை துரைமுருகன் : மோதும் பாஜக – நா.த.க!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2024, 4:34 pm

ஆடியோ லீக் செய்த சூர்யா.. அண்ணாமலை ஒரு சில்லரை என ரிப்ளை செய்த சாட்டை துரைமுருகன் : மோதும் பாஜக – நா.த.க!

சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் தனது youtube சேனல் ஒன்றில் பாஜக குறித்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடப் போவது குறித்தும் ஒரு பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் அண்ணாமலையை வைத்துக்கொண்டு பாஜக தமிழகத்தில் தங்களை எதிர்ப்பவர்களுடைய வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் அமலாக்க துறையை அனுப்பி பயமுறுத்துவதாக கூறினார்.

மேலும் கோவையில் அண்ணாமலை போட்டியிட உள்ள நிலையில் அவரிடம் சமரசம் பேசி, திமுக அங்கு வலுவற்ற ஒரு போட்டியாளரை களம் இறக்க இருப்பதாகவும் பல கருத்துக்களை பேசியிருந்தார்.

இந்நிலையில் அந்த வீடியோவை மேற்கோள் காட்டி தமிழக பாஜகவின் OBC மோர்ச்சா மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா அவர்கள் தற்பொழுது பரபரப்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சட்டை துரைமுருகன் மற்றும் சூர்யா இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் பதிவாகியுள்ளது. பாஜக பற்றி ஏன் இப்படி அவதூறாக பேசுகிறீர்கள் என்று சாட்டை துரைமுருகனிடம் கேட்க, இனி அப்படி எந்த வீடியோவும் வெளியிட மாட்டேன். எங்களுடைய ஒரே டார்கெட் திமுக மட்டும் தான் என்று தலைவர் கூறியுள்ளதாகவும், இனி மற்ற கட்சியினர் பற்றி பேச வேண்டாம் என்று சீமான் கூறியதாகவும் அதில் சாட்டை துரைமுருகன் கூறுகின்றார்.

அதேபோல விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சியின் வசமிருந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், மைக் சின்னம் தருவது குறித்தும் சாட்டை துரைமுருகன், திருச்சி சூர்யாவிடம் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் சவப்பெட்டி சின்னத்தை கூட வாங்கிட்டு போய்விடலாம் என்பது போல தோன்றுகிறது என்று கூறி தனது கட்சியைத் தானே அவமதித்து பேசும் வண்ணம் சர்ச்சையான வகையில் சாட்டை துரைமுருகன் பேசி இருக்கிறார்.

இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிய நிலையில், சூர்யா சிவாவை விளாசியுள்ளார் சாட்டை துரைமுருகன். அவர் விடுத்துள்ள பதிவில்,ஆடியோல என்னடா சொல்றது இங்கேயே சொல்றேன். எங்கள் இனத்தை கொன்றொழிக்க காரணாமாக இருந்த காங்கிரசும் துணை நின்ற திமுகவும் எங்கள் முதல் எதிரிகள் !

அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக் கட்டவே நாம்தமிழர் கட்சி துவங்கப்பட்டது !

பாஜக மனித குலத்திற்கு ஆபத்து அண்ணாமலை போன்றவர்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கே பேராபத்து என்பதை சொல்லி காணொளி போட்டதற்கு காலில் விழாத குறையாக கெஞ்சி கோரிக்கை வைப்பது போல் அலைபேசி உரையாடலை பதிவு செய்து போடுவதெல்லாம் சில்லரைத்தனத்தின் உச்சம் !

இதுக்காகவே கோவையில் தங்கியிருந்து அண்ணாமலை போன்ற சில்லரைகளை காலி செய்வோம் என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூர்யா சிவா தற்போது தனது x தளப்பக்கத்தில், தேவைப்பட்டால் சொல்லுங்கள் கஷ்டப்பட வேண்டாம் நானே ரிலீஸ் செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் பாஜக நிர்வாகியும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகியும் மாறி மாறி வசைபாடிக் கொண்டுள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 293

    0

    0