சென்னை: மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் 20,304 பேருந்துகள் 10,417 வழித்தடங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பொது போக்குவரத்தை ஒரு கோடியே ஏழு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். மேலும், பெண்களுக்கான இலவச போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பெண்கள் பயணம் செய்யும் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 62 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 22 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2,500 மாநகரப்பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.
அதேபோல அவசர கால எச்சரிக்கை பட்டனும் பேருந்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், மாநகர பேருந்துகளில் சிசிடிவி பயன்பாடு இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
This website uses cookies.