குமரியில் மதமாற்ற சர்ச்சை…குற்றச்சாட்டுகளை அடுக்கிய மாணவிகள்: தையல் ஆசிரியை சஸ்பெண்ட்…கல்வி அலுவலர் ஆக்ஷன்..!!

Author: Rajesh
13 April 2022, 2:06 pm

கன்னியாகுமரி: இந்து கடவுள்களைப் பற்றி அவதூறாக பேசியும் மதம் மாறச் சொல்லியும் மாணவிகளை வற்புறுத்திய தையல் ஆசிரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றுபவர் ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம்.

காவல்துறையினர் விசாரணை

இவர், தையல் வகுப்புக்கு வரும் இந்து மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசுவதோடு கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் நேற்றும் தையல் வகுப்பிற்கு சென்ற மாணவிகளிடம் இதே நடவடிக்கையில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து மாணவிகள் உடனடியாக தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவலளித்து அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீசாரும் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இந்த நிலையில் தலைமை ஆசிரியர் முன் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி அவர்களிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கோட்ட போது மதமாற்ற சர்ச்சை வீடியோ சம்பந்தமாக தையல் ஆசிரியை இடம் விசாரணை நடத்தி அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

latest tamil news

இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளை மதமாற்ற செய்ய ஆசிரியை வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1695

    0

    1