கோவை தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய வழக்கு.. நீதிபதி கேட்ட ஒரே ஒரு கேள்வி : Court போட்ட அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2024, 11:59 am

கோவை தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய வழக்கு.. நீதிபதி கேட்ட ஒரே ஒரு கேள்வி : Court போட்ட அதிரடி உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த டாக்டர் சுதந்திர கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க சென்றபோது, வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் எனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது.

அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்க: ரேஷன் கடையில் BEER பாட்டிலுடன் மட்டையான ஊழியர்.. தட்டியெழுப்பி வழியனுப்பி வைத்த OFFICERS!

இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு சுதந்திர கண்ணன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தனது வாதத்தில், மனுதாரரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து 2021ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதனையடுத்து வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டோரை மீண்டும் பட்டியலில் இணைத்து ஓட்டுப்போட அனுமதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது.

பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க கோரும் நீங்கள், ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானபோது என்ன செய்தீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து கோவை மக்களவைத் தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!