12 மணி நேர வேலை சட்டத்திருத்த மசோதா நிறுத்தி வைப்பு : கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பின்வாங்கியது தமிழக அரசு!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2023, 7:59 pm

தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோழமை கட்சிகளின் எதிர்ப்பையும் தாண்டி இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 70க்கும் மேற்ப்பட்ட தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசின் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதற்கிடையில் சட்ட மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்த மசோதா வாபஸ் பெறப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், வேலை வாய்ப்பினை பெருக்கிடும் நோக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் மசோதா நிறுத்திவைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!