தோனி இல்லாம இந்த வெற்றியே இல்ல : ஒலிம்பிக் நாயகன் ஸ்வப்னில் உடைத்த ரகசியம்..!

Author: Sudha
2 August 2024, 12:00 pm

ஒலிம்பிக் போட்டியின் 50 மீ ரைஃபில் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் கனவு நாயகனாக மாறி இருக்கிறார் ஸ்வப்னில் குசலே .மகாராஷ்டிரா அரசு இவர் வெற்றியை கௌரவிக்கும் விதமாக 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையை அறிவித்துள்ளது. இவருடைய தந்தை இவரை மகாராட்டிர அரசாங்கத்தின் கிரிடா பிரபோதினி என்ற விளையாட்டு திட்டத்தில் சேர்த்தார். ஓராண்டு கடுமையான பயிற்சிக்குப் பிறகு, ஸ்வப்னில் துப்பாக்கிச் சுடுதலை தனக்குரிய விளையாட்டாகத் தேர்ந்தெடுத்தார்.

ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் 50 மீட்டர் சுழல் துப்பாக்கி மூன்று நிலைப் போட்டியில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார்.நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் பல தடைகளை கடந்து இந்த வெற்றியை அடைந்துள்ளார். அபினவ் பிந்த்ரா.ககன் நரங் இவர்களைத் தொடர்ந்து இந்த வெற்றியை பெரும் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

தன்னுடைய வெற்றிக்கு பெரும் ஊக்கமாக இருந்தவர் கிரிக்கெட் வீரர் தோனி என சொல்லியுள்ளார் ஸ்வப்னில்.தோனியின் வாழக்கை வரலாற்றுத் திரைப்படமான தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தை பல முறை ரசித்துப் பார்த்ததாகவும்,தோனியின் வாழ்க்கை தந்த ஊக்கமே இந்த வெற்றியை பெறுவதற்கு தனக்கும் ஊன்றுகோலாக இருந்தது எனவும் சொல்லியுள்ளார்.

தோனி,ஸ்வப்னில் இருவருக்கும் மிகப்பெரிய ஒற்றுமை ஒன்று உண்டு. இவர்கள் இருவருமே இந்தியன் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியவர்கள்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்