CM வீட்டில் பாமாயில் யூஸ் பண்றாங்களா? தமிழகத்தில் உள்ள சமாதிகளை உடைப்பார்கள் : தங்கர் பச்சான் ஆவேசம்!
Author: Udayachandran RadhaKrishnan6 August 2024, 2:24 pm
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிர்வாகியும், இயக்குநருமான தங்கர்பச்சான்.,எங்காவது தமிழ்நாட்டில் விவசாயம் செய்து கோடீஸ்வரன் ஆகியவைகளை பார்த்து உள்ளீர்களா?? விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் காலநிலை மாற்றம் மற்றும் கடனுடன் போராடி வருகிறார்கள்.
ஏற்கனவே அரசு கொடுக்கும் சாராயத்தை குடித்து லட்சக்கணக்கான மக்கள் இறக்கிறார்கள்… பாமாயிலினை எப்போது இறக்குமதி செய்கிறீர்கள்? ஏன் இறக்குமதி செய்கிறீர்கள்?
வெளிநாட்டில் இருந்து வாங்குவதால் அதில் கிடைக்கும் கமிஷன் கிடைக்க வேண்டி பாமாயிலின் இறக்குமதி செய்கிறீர்கள்… முதல்வர் வீட்டிலும், வேளாண் துறை அமைச்சர் வீட்டிலும் பாமாலின் மூலம் சமைக்கிறார்களா??
பக்கத்து மாநிலமான கேரளாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.. அங்கு விளைகிற தேங்காயை வைத்து என்னென்ன செய்கிறார்கள்…
தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகக்கூடிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றுக்கு உரிய விலையை கொடுத்து வாங்கி, பாமாயிலுக்கு மாறுதலாக விநியோகம் செய்யுங்கள்…
பதநீர், நீரா உள்ளிட்ட பானங்களை இறக்கி விற்பனை செய்ய கூடாது என சொல்லாமல் திமுக அரசு அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்…. விவசாய குடும்பங்களை அழவைத்து என்ன பயன்? என பேசினார்.
இயக்குனர் கௌதமன் பேட்டி
ஆட்சி செய்யும் திமுக மற்றும் முன்னாள் ஆட்சியாளர்கள் அதிமுக ஆகியோர் சாராயம் விற்பதில் தான் குறிக்கோளாக இருக்கிறார்கள்….. கள் இறக்கி விற்பனை செய்தால் அவர்களுக்கு அந்த தொழில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என எண்ணுகிறார்கள்
வங்கதேச கலவரம் போல ஒருநாள் விவசாயிகளுக்காக இந்த இளைய தலைமுறை அனைத்தையும் சமாதிகளையும் அடித்து உடைக்கும் அப்போது தெரிய வரும் என கூறினார்