திரௌபதி பட இயக்குநர் மோகன்.ஜி கைது : நள்ளிரவில் சத்தமே இல்லாமல் தூக்கிய போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2024, 11:44 am

திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டு பிரசாதம் விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில் அது குறித்து சமூகவலைதளங்களில் பெரும் விவாதமே எழுந்தது.

லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள். என பதிவிட்டிருந்தார்.

அதே போல தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக கூறியிருந்தார். இந்த சர்ச்சை கருத்துக்காக அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை காசிமேட்டில் உள்ள இல்லத்தில் வைத்து கைது செய்யப்படுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க: இனி தங்கமே வாங்க முடியாது போல : மீண்டும் ஷாக் தரும் விலை.. இன்றைய நிலவரம்!

அவர் கூறியதாவது, சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் G அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது என பதவிட்டுள்ளார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 300

    0

    0