சமூக விரோதிகளின் கூடாரம் தமிழக பாஜக… ஹெச் ராஜா கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2023, 4:17 pm

கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவாக ஓராண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாட முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு சிறப்பு விழாவை முடித்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பாஜகவினர் தான் அதிகம் என கூறினார்.

மேலும் அவரிடம், இன்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் திமுகவில் அதிகம் ரவுடிகள் தான் இருக்கிறார்கள் என எச். ராஜா கூறிய கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, சமூகவிரோதிகளின் கூடாரமாக தமிழக பாஜக மாறிவருவதாகவும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பாஜகவினர் தான் அதிகம்.

மேலும் தமிழகத்தில் அவதூறுகளை பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுப்பது, மக்களிடையே மதவாதத்தை தூண்டுதல், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது என பாஜகவில் தான் சமுக விரோத கூடாரமாக மாறிவருகிறது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

  • Zee Tamil Mirchi Senthil மொத்தமும் போச்சு.. சைபர் கிரைமில் சிக்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகர்..!!