தமிழக பாஜக தலைவராக ஓபிஎஸ், பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் : ஜெயக்குமார் ஆரூடம்.!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2024, 5:06 pm

தமிழக பாஜக தலைவராக ஓபிஎஸ், பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் : ஜெயக்குமார் ஆரூடம்.!!

டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை ஒட்டி சென்னை ஆற்காடு சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பலதரப்பட்ட கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூடாது என தெரிவித்த அவர், பலதரப்பட்ட மக்களை பாதிக்கும் பொது சிவில் சட்டத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் கூறினார்.

எதிர்காலத்தில் தமிழக பாஜக வுக்கு பன்னீர்செல்வம் தலைவராகவும், டிடிவி தினகரன் பொதுச் செயலாளர் ஆகவும் செயல்படுவது எதிர்காலத்தில் நடக்கப் போகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் வாக்கு வங்கிகள் என்றுமே சரிந்தது இல்லை என்ற அவர், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்ததால் தான் 2019, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு பாரதிய ஜனதா கட்சியை காரணம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்ததால் கடந்த இரண்டு தேர்தலிலும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்று கூறியவர், தற்போது பாஜக தங்களுடன் கூட்டணியில் இல்லாததால் சிறுபான்மையினர் ஓட்டு அதிமுகவுக்கு முழுமையாக கிடைக்கும் என்றும் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 275

    0

    0