சவுக்கு சங்கர் வழக்குல காட்டுற வேகம் ஜெயக்குமார் மரண வழக்குல காமிக்கலாமே? தமிழக பாஜக வாய்ஸ்!
Author: Udayachandran RadhaKrishnan13 May 2024, 2:51 pm
சவுக்கு சங்கர் வழக்குல காட்டுற வேகம் ஜெயக்குமார் மரண வழக்குல காமிக்கலாமே? தமிழக பாஜக வாய்ஸ்!
பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதாக கடந்த வாரம் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். மேலும் சவுக்கு சங்கர் பயன்படுத்திய காரில் இருந்து போலீசார் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து பல வழக்குகளும் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக கோவை சிறையில் அடைக்கப்பட்ட போது சவுக்கு சங்கரின் கைகளை போலீசார் சுற்றி நின்று தாக்கியதாகவும், இதில் அவரது கை உடைக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து மதுரை நீதிமன்றத்தில் வலது கையில் கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த உத்தரவிட்டிருந்தனர். இந்தநிலையில் சவுக்கு சங்கரை போலீஸ் விசாரணைக்கு அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். முன்னதாக மருத்துவமனையில் சவுக்கு சங்கர் உடல் நலம் தொடர்பாக ஆய்வுக்காக அழைத்து சென்றனர்.
மேலும் படிக்க: 7 வருடங்களுக்கு பின் நெல்லையில் மீண்டும் அதிர்ச்சி.. அதே இடத்தில் தீக்குளித்த நபர் : விசாரணையில் ஷாக்!
அப்போது வீடியோ கேமராவை பார்த்த சவுக்கு சங்கர் எனது கையை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் என கூறியவர், கோவை சிறையில் தான் சமாதி என மிரட்டுவதாகவும், என்னை கொலை செய்துவிடுவார்கள் என புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் கைது நடவடிக்கைகள், அடுத்தடுத்து பாயும் வழக்குகள் என தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது X பக்கத்தில், டில்லிக்கு சென்று ஒரு யூ-டியூபரை கைது செய்ய காட்டும் முனைப்பை, திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி தலைவரின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் செலுத்தாமல் இருப்பது ஏனோ?
மீண்டும் ராமஜெயம் படுகொலை வழக்கின் நிலை தானோ? சி பி ஐ விசாரணைக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் தமிழக அரசு என பதிவிட்டுள்ளார்.