முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
முக்கியமாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த விசாரணை அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள், புதிய தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து துறை அமைச்சர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி போடுவதாக நேற்று சென்னை வந்த அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…
லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ… “வழக்கு எண் 18/9” திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இவர்…
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு,…
தொடர் தோல்வி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றை முன்தினம் இரவு சென்னை வந்தார். நேற்று அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்க…
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
This website uses cookies.