தமிழக முதல்வர் 99% கனவு காண்கிறார்… பாஜகவுக்கு வாக்களிக்க இளைஞர்கள் ஆர்வம் : அண்ணாமலை பேச்சு!!
திருச்சி மாவட்டம் துறையூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என்மன் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற நடை பயணம் சிலோன் ஆபீஸில் தொடங்கிய பேரணி பெரிய கடை வீதி பாலக்கரை திருச்சி ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது வரும் வழியில் ஊனமுற்ற பெண்ணுடன் செல்பி எடுத்துக்கொண்டு அவர்கள் பரிசாக கொடுத்த புத்தகத்தையும் பெற்றுக்கொண்டு நடைபயணத்தை தொடங்கினார்.
பேருந்து நிலையத்தில் தனது பிரச்சார வாகனத்தில் நின்று கொண்டு சிறப்புரையாற்றினார் அப்பொழுது தமிழகத்தில் அரசு வேலை பார்க்கும் அதிகாரிகள் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு வேலை பார்க்கக்கூடிய அவல நிலை உள்ளது. இப்படி இருந்தால் எப்படி தமிழகம் முன்னேறும் இங்கிருக்கும் திமுக ஆட்சியாளர்கள் மணல் கொள்ளை அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.
தன் குடும்பம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் துணைவேந்தராக தமிழக முதல்வர் வரவேண்டும் என ஆசைப்படுகிறார்.
ஆனால் படித்த பேராசிரியராக இருப்பவர் மட்டுமே அந்த பதவிக்கு தகுதியானவர்கள் இதை புரியாமல் ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் போராட்டம் நடத்துவதற்கு எவ்வளவோ பிரச்சனை இருக்கின்றன.
மதுவுக்கு எதிராக போராடலாம் மணல் கொள்ளைக்கு எதிராக போராடலாம் இதை தவிர்த்து தங்களது மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை விற்பனை செய்வதற்காக நீட்டுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி ஒரு குடும்பம் மட்டுமே நல்லா இருக்க வேண்டும் என்ற நோக்கத்தையே காட்டுகிறது என்றார் மேலும் பாரத பிரதமர் துறையூர் நகரத்திற்கு மட்டுமே 109 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீருக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை அனைத்தும் 100% மத்திய அரசின் நிதி ஆகும் எதிலும் மாநில அரசு கொள்ளை அடிக்கிறது இதேபோல் துறையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அரசு கல்லூரி பாலிடெக்னிக் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து இதுவரை எதையுமே நிறைவேற்றவில்லை.
ஆனால் தமிழக முதல்வரோ 99 சதவீதம் பகல் கனவு கண்டு கொண்டு உள்ளார் எனவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து மூன்றாவது முறையாக மோடிஜி பிரதமராக ஆக்க வேண்டும் என பேசினார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.