சாதனைகளை சாத்தியமாக்கிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்… மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீர் பாராட்டு!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவங்கியுள்ள இந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு விரிவாக்க திட்டத்தை பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும், நடிகருமான திரு. கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில் பின்வருமாறு கூறியுள்ளார்.
“இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும்.
இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரம்பரிய நெல் ரகங்களையும், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவர்க்கங்களையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இத்திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும்.
விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.