கோவை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நிதி ஆயோக் கூட்டத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான வாக்காளர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு குறைகளை நிறைவாக்குவார் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதல்வருக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் துரதிஷ்டவிதமாக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிவிட்டார் தமிழக முதல்வர்
மேலும் முதல்வர் பேசும்போது மதுரை எய்ம்ஸ் பற்றி பேசுகிறார், மெட்ரோ ரயில் திட்டம் பற்றி பேசுகிறார். இவற்றுக்கு வரும் நாட்களில் மத்திய அரசு நிதி ஒதுக்கும் என நம்புகிறோம். அது அவர்களது கடமை.
முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் அமர்ந்து நேரடியாக கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கின்றனர். நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்த்ததற்கு காரணம் அரசியல் வாக்கு வங்கி தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.நிதி ஆயோக் கூட்டம் என்பது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடக்கக்கூடிய ஒன்று. அதில் தமிழகத்தின் அழுத்தமான ஆலோசனைகளை, தேவைகளை எடுத்து கூறக்கூடிய ஒரே பிரதிநிதி முதல்வராகத்தான் இருக்க முடியும். அதை அவர் செய்ய தவறிருக்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்த்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழக மக்களுக்கு உங்களது கடமையை நீங்கள் செய்யவில்லை என குற்றம் சாட்டுகிறோம். எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு பாகுபாடு இன்றி நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறது. அதை தாண்டி எந்தெந்த திட்டங்களுக்கு அதிகம் தேவையோ அந்தத் திட்டங்களுக்கு படிப்படியாக எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கிக் கொண்டிருக்கிறது.ஒரு பட்ஜெட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் குறிப்பிட்டு அனைத்து மாநிலத்திற்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றால், அது பாஜகவிற்கு மட்டுமல்ல காங்கிரஸ்க்கும் சாத்தியமில்லை.
முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதது தப்பு எனும் மக்களின் கருத்தை மறக்கக்கூடிய வகையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்’ என்றார்.நல்லரசாக செயல்படும் மத்திய அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றக்கூடிய நல்ல சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு பெரும்பாலான மக்கள் இந்தியாவில் வாக்களித்துள்ளனர். எனவே பலமான தமிழகமும், வலிமையான பாரதமும் ஏற்பட பிரதமர் தலைமைக்கு தமிழக கட்சிகள் துணை நின்று வளமான தமிழகத்தை உருவாக்க 2026 இல் வழி வகுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள் என்று பேசினார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.