தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் திட்டம் தொடர்கிறது. அதேசமயம் ஒரு மாதத்திற்கு 200 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.27.50-ம், 2 மாதங்களுக்கு 300 – 400 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.147.50 வரையிலும், 501 -600 யூனிட்கள் பயன்படுத்தினால் ரூ.155 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் கையில் எடுத்தது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான டெண்டர் செயல்முறை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மாநிலம் முழுவதும் மூன்று தொகுப்புகளாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மின்மீட்டர் முறைகேட்டை தடுக்க ஸ்மார்ட் மீட்டர் வாங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ள என அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்தபின், வீடுகள்தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.
முதல்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில் 80 லட்சம் மீட்டர்களும் பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்க, கடந்த 5ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. பின், டெண்டர் கடைசி தேதி, மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஸ்மார்ட் மின் மீட்டருக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மின் வாரிய அதிகாரிகள், ஸ்மார்ட் மின் மீட்டர் டெண்டருக்கான விளக்க கூட்டத்தில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 265 சந்தேகங்களை எழுப்பினர். நிறுவனங்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு ஏற்ப டெண்டர் விதிகளில் திருத்தங்கள் செய்ய வேண்டும். எனவே, நிறுவனங்கள் கேட்கும் விபரங்கள் இடம்பெறுவதுடன், மூன்று தொகுப்புகளாக நடைபெற இருந்த பணியை ஒரே தொகுப்பாக சேர்த்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான புதிய டெண்டர் விரைவில் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இந்த நிலையில், பல்வேறு திருத்தங்களுடன் புதிய டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், டெண்டரில் தேர்வாகும் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம், பராமரிப்பு மேற்கொள்ள நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.