தமிழக மீனவர்கள் கைது… கடிதம் அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த ரிப்ளை!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2024, 6:24 pm

ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:- 1974ம் ஆண்டில் இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்த பிரச்சினை தொடங்கியது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 273

    0

    0