ஆளுநருக்கு தமிழக அரசு வைக்கப் போகும் செக்… 6 மணி நேரத்தில் கிண்டிக்கு செல்லும் மசோதாக்கள்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 8:42 am

ஆளுநருக்கு தமிழக அரசு வைக்கப் போகும் செக்… 6 மணி நேரத்தில் கிண்டிக்கு செல்லும் மசோதாக்கள்..!!!

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் இன்று சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் முன்னதாக அறிவித்திருந்தார்,.

அதன்படி, 10 மணிக்கு கூடியதும், சபாநாயகர் அப்பாவு சபை நடவடிக்கைகளை தொடங்கி வைத்து நிகழ்ச்சி நிரலை எடுத்து சொல்வார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் இடம் பெற்றுள்ள சட்ட மசோதாக்களை ஒவ்வொன்றாக தாக்கல் செய்யுமாறு அமைச்சர்களை கேட்டுக்கொள்வார். இதையடுத்து, சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய அமைச்சர்கள் அனுமதி கோருவார்கள்.

அப்போது மசோதாக்களில் ஏதாவது திருத்தம் வேண்டும் என்று விருப்பப்பட்டால் எம்எல்ஏக்கள் அது குறித்து தங்களது கருத்துக்களை முன் வைப்பார்கள்.

உடனே, இதற்கு அமைச்சர்களும் விளக்கம் அளித்து, மசோதாவை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்வார்கள். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மசோதாவையும் சபாநாயகர் அப்பாவு, மெஜாரிட்டி அடிப்படையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற கோருவார்.

அதன்படியே, மசோதாக்களும் நிறைவேற்றப்படும். சட்டசபையில் இன்று நிறைவேற்றப்படும் 10 மசோதாக்களும் சட்டசபை கூட்டம் முடிந்ததுமே, சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்… அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு உடனே அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

னினும், இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில், பாஜக பங்கேற்காது என்ற தகவல் வெளியானாலும், நாங்கள் நிச்சயம் சட்டசபையில் பங்கேற்போம் என்று நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக தெரிகிறது. அந்தவகையில், இன்றைய தினம் மிகப்பெரிய எதிர்பார்ப்பும், பரபரப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டிருக்கிறது.

  • Rajini took the actress who was shooting in the car படப்பிடிப்பில் இருந்த நடிகையை காரில் போட்டு தூக்கிச் சென்ற ரஜினி.. பல நாள் பிறகு வெளியான உண்மை!