இந்திய ஆட்சிப்பணிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2022, 5:28 pm

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் முடிவிற்கு, தமிழக அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த முடிவினை கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், சமீபத்தில் ஒன்றிய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954ல் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் செய்ய தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்றும் இந்த உத்தேச திருத்தங்களுக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து கொள்வதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆட்சிப் பணிகளின் திருத்தம் செய்ய மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பின் முடிவெடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 7082

    0

    0