தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு திடீர் பாராட்டு… முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அப்பாவு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 2:36 pm

தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு திடீர் பாராட்டு… முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அப்பாவு!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், காகிதமில்லாத சட்டமன்றம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் செயல்படுத்தப்படும் இந்த காகிதமில்லாத சட்டமன்றம் திட்டத்திற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில், காகிதமில்லாத சட்டமன்றம் திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்தியதை பாராட்டி ஒன்றிய அரசு வழங்கிய சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாழ்த்துப் பெற்றார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 433

    0

    0