தமிழக அரசின் பட்ஜெட் வெறும் கானல் நீர்… வார்த்தை ஜாலம் மட்டும்தான் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2024, 3:58 pm

தமிழக அரசின் பட்ஜெட் வெறும் கானல் நீர்… வார்த்தை ஜாலம் மட்டும்தான் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

2024 – 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நான்காவது முறையாக திமுக அரசு இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது. மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த பொழுது ஏழை மக்களுக்கு பசியை போக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். 3 ஆண்டுகளாக மாநகராட்சி உட்புறசாலைகள் சீர் செய்யப்படவில்லை.

கிராமப்புற சேலைகளை சீர் செய்ய ஆயிரம் கோடி தான் ஒதுக்கி உள்ளனர். இந்த பட்ஜெட்டில் புதிதாக தடுப்பணைகள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படும் அது போல் தான் இந்த பட்ஜெட்டிலும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கி உள்ளது.

8,33,367 கோடி கடன் இந்த ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் உள்ளது. அன்று தமிழ்நாட்டை கடனாளி ஆக்கி விட்டனர் என்றார் . கடன் மேலாண்மையை சரி செய்ய நிபுணர் குழு அமைத்தால் இப்பொழுது அந்த குழுவை தேடும் ஒரு குழு போட வேண்டும்.

நிதிநிலை வரவு செலவு திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளது, முழுமையாக என் அறிக்கையில் குறிப்பிடுகிறேன். தேன்கூடும் கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான் . இரண்டும் அவற்றுக்கு உழைத்தவர்களுக்கு பயன் தருவதில்லை.

கனவு பட்ஜெட், கானல் நீர் மக்களுக்கு பயன் தராது. இந்த ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து வருடா வருடம் கடன் பெற்று தான் இந்த அரசு ஆட்சி நடத்தி வருகிறது.

தமிழக அரசு அனைத்திலும் நம்பர் ஒன் என்று தெரிவிக்கிறது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலத்தில் முதலிடம் ஆக உள்ளது தமிழ்நாடு.

அதிக வருமானம் வருகிறது இப்போது, ஜி எஸ் டி, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அதிக வருமானம் வருகிறது. அதிமுக ஆட்சியை விட இப்பொழுது அதிக வருமானம் தான் வருகிறது ஆனால் எந்த திட்டங்களும் முறையாக அறிவிக்கப்படவில்லை.

தாலிக்கு தங்கம் அம்மா இருசக்கர வாகனங்கள், அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்தோம். அதிக திட்டங்களை கொண்டு வந்து அதிக சாலைகளை அமைத்துக் கொடுத்தோம்.

இப்பொழுது என்ன புதிய திட்டங்கள் உள்ளது பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை ஒன்றுமே இல்லை. தாலிக்கு தங்கம் திட்டத்தில் ஆயிரம் கோடியில் இருந்து 600 கோடியாக குறைத்துள்ளனர்.

நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை நிறுத்தி அதற்கு செலவழித்து நிதியை நிறுத்தி அதற்கு வேறு பெயர் கொடுத்து வேறு திட்டத்திற்கு செயல்படுத்துகிறார்கள்.

2021-22 இல் புதிய பேருந்துகள் வாங்குவதாக சொன்னார்கள், அடுத்த ஆண்டும் அதையேதான் சொன்னார்கள், அடுத்த ஆண்டும் இதைத்தான் சொல்வார்கள் இது ஏட்டு அளவில் தான் இருக்கும் நடை முறைக்கு வராது.

யார் ஆட்சியில் இருந்தாலும் இதே நிலைமைதான் இருக்கிற நிதியை வைத்து யார் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதுதான்.

நாங்கள் கொண்டு வந்த உயர்ந்த நிலையை தான் தமிழகத்தில் இப்பொழுது தக்க வைத்து வருகிறார்கள். அதையே சில நேரங்களில் அவர்களால் செய்ய முடியவில்லை.

2035 இல் அடைய வேண்டிய இலக்கை 2019 இல் ஏற்படுத்தினோம், கல்வி வளர்ச்சி பெறுவதற்கு அதிமுக நடவடிக்கை எடுத்தது. கற்போர் எண்ணிக்கை உயர்ந்தது.

வார்த்தை ஜாலத்தில் நன்றாக உள்ளது நடைமுறைக்கு வந்தால் தான் பயன் அளிக்கும். இந்த ஆட்சி வந்த பிறகு என்னென்ன தொழில் வந்துள்ளது எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக முதலீட்டாளர்கள் மாநாடு போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் எத்தனை தொழிற்சாலைகள் நடைமுறைக்கு வந்துள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை இன்னும் கொடுக்கப்படவில்லை.

கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பினை கொடுத்து இளைஞர்களிடம் வாக்குகளை பெற்று விட்டு இன்றுவரை அதை செய்யவில்லை என்றார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்