தமிழகம் 2 முறை அந்த வாய்ப்பை இழந்திருக்கு.. அதுக்கு காரணம் திமுக தான் : அமித்ஷா பகீர் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2023, 2:46 pm

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான அமித்ஷா தமிழாகத்தில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ளார். நேற்று இரவு சென்னை வந்த அவருக்கு பாஜகவினர் பலத்த வரவேற்பு அளித்தனர்.

இன்று தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள், தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் சென்னை கேளம்பாக்கத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில அமித்ஷா பேசுகையில், 2 முறை தமிழகர்கள் பிரதமராகும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர். அதாற்கு காரணம் திமுக தான் என்றும், வரும் காலத்தில் தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக உருவாக வேண்டும். அதற்காக நாம் (பாஜகவினர்) கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் பேசியதாக தகவல் வெளியாகியுளளது.

மேலும், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 25 தொகுதிகளை வெல்ல வேண்டும் என குறிப்பிட்டு அமித்ஷா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 458

    0

    0