தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது.. வஞ்சிக்காதீங்க : CM ஸ்டாலின் ஆவேசம்!!
Author: Udayachandran RadhaKrishnan27 April 2024, 7:29 pm
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது.. வஞ்சிக்காதீங்க : CM ஸ்டாலின் ஆவேசம்!!
மத்திய அரசு ஒதுக்கிய வெள்ள நிவாரணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
மேலும் படிக்க: கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் மனைவி செய்த செயல்.. SHOCKஆன கணவர்.. துண்டான கை!!
ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.