வாரிசு அரசியலை நோக்கி தமிழகம் செல்கிறது : ஆளுநர் தமிழிசை சவுந்ததரராஜன் வருத்தம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2022, 7:35 pm

சென்னையில் அவர் அளித்த பேட்டி: ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமம். திமுக துணைப் பொதுச்செயலாளரான கனிமொழிக்கு எனது வாழ்த்துக்கள். தலைவர் அண்ணன், துணை பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக மக்கள் நினைக்கின்றனர்.

திருவள்ளுவரை ஆன்மிகவாதியாக மக்கள் நம்புகிறார்கள். அவர், அவ்வாறு உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறார். மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுப்பது குறித்து கவர்னர் ரவி பேசியிருக்கிறார்.

ராஜராஜசோழன் வரலாறும் மறைக்கப்பட்டுள்ளது. ரவி ஒரு காரணத்திற்காக திருக்குறளை படிக்கிறார். அது பற்றி ஆராய்ச்சி செய்கிறார். இவ்வாறு தமிழிசை கூறினார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!