கொலை நகரமாகும் தமிழகம்? அரசியல் தலைவர்களுக்கு குறி? அடுத்தடுத்து கட்சி பிரமுகர்கள் கொலையால் அச்சம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 July 2024, 11:35 am

தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலையால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதம், பழிக்கு பழி, சொத்து தகராறு என அரசியல் கட்சி பிரமுகர்களை குறி வைத்து நடக்கும் கொலையால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.

கடந்த மே மாதம் 2ஆம் தேதி நெல்லை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவருடைய மகன் போலீஸில் புகார் கொடுத்திருந்த நிலையில் இரு நாட்கள் கழித்து அதாவது கடந்த மே 4 ஆம் தேதி அவருக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

அடுத்ததாக ஜூலை 3ஆம் தேதி சேலம் கொண்டலாம்பட்டியில் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமாரும், இரண்டாவது குற்றவாளியாக கவுன்சிலர் தனலட்சுமியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது நேற்று சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 8 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக தமிழகத்தில் கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனம் செய்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!