தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு : அண்ணாமலை மீது அவதூறு வழக்கு போட்ட திமுக எம்பி..!!!
Author: Udayachandran RadhaKrishnan12 May 2023, 10:59 am
தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், திமுக நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியில் எனக்கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக பைல்ஸ் என்ற வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், டிஆர் பாலு உட்பட 17 பேரின் சொத்து மதிப்பு 1லட்சத்து 50 ஆயிரம் கோடி என தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகிகள் அண்ணமாலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதில் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் 500கோடி,100கோடி, 5கோடி . 1கோடி என நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நோட்டீஸ்க்கு பதில் அளித்த அண்ணாமலை, பொது தளத்தில் இருக்கும் தகவலைத்தான் வெளியிட்டேன். எனவே மன்னிப்பு கேட்க முடியாது சட்ட ரீதியாக வழக்கை சந்திக்க தயார் என கூறியிருந்தார்.
இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது முன்னாள் மத்திய அமைச்சரும்.
திமுக பொருளாளருமான டிஆர் பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை கூறியதாக தெரிவித்துள்ளார். எனவே அண்ணாமலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.