கார் விபத்தில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் பலி…போட்டியில் பங்கேற்க சென்ற போது நிகழ்ந்த சோகம்: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..!!

Author: Rajesh
18 April 2022, 8:45 am

ஷிலாங்க்: தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்ற தமிழக இளம் வீரர் கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

83வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மேகாலயாவில் இன்று தொடங்குகிறது. இதில், தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர். அசாம் தலைநகர் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷிலாங்க் நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது.
மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி வீரர்கள் பயணித்த கார் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இளம் வீரர் தீனதயாளன் விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கார் டிரைவர் மற்றும் எஞ்சிய 3 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், விபத்தில் படுகாயமடைந்த கார் ஓட்டுநரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார் விபத்தில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் விஷ்வாவின் உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்றபோது கார் விபத்தில் தமிழக வீரர் தீனதயாளன் விஷ்வா உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

நம்பிக்கைக்குரிய, இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவு வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியை அளிக்கிறது. சாதனை புரிந்து வந்த விஸ்வா விரைவில் நம்மை விட்டு பிரிந்தது வேதனை அளிக்கிறது.

கார் விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளனின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு குழுவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வீரர் தீனதயாளன் விஷ்வா கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1287

    0

    0